அம்பாளை விட மங்கள வஸ்து இல்லை. ‘ஸர்வ மங்கள மாங்கல்யே’ என்று அம்பாளைச் சொல்வார்கள். அவர்களுடன் சேர்ந்திருப்பதாலே பரமேஸ்வரனும் மங்கள ஸ்வரூபியாகிறார். மங்களமே வடிவமான அம்பிகை மகா சுமங்கலி. அவளுடைய சௌமாங்கல்யத்திற்கு எப்படி பங்கம் உண்டாக முடியும்? இதனால் தான் ஆலஹாலவிஷம் சாப்பிட்டும் கூடப் பரமேச்வரன் சௌக்யமாகவே இருக்கிறார். ஆசார்யமான (ஸ்ரீ ஆதிசங்கர்ர்) ஸௌந்தர்யலஹரியில் இப்படித்தான் கூறுகிறார்.

No comments:
Post a Comment