" திடுதிப்புன்னு என்னை
மடாதிபதியா,
ஸ்வாமிகள்..ன்னு
ஆக்கப்போறான்னு
தெரிஞ்சதும்
அலமாந்துதான்
போனேன்.ஆனா,
கலவைக்கு
போய்
அங்க
மடத்துக்குள்ள
போன
ஒடனேயே
அந்த
கலவரம்
எல்லாம்
போயிடுத்து.
ஆச்சர்யமா,
என்னமாவோ
நேக்கு
மொதல்ல
இருந்த
திகில் போயிடுத்து! பயம்
இருக்கத்தான்
இருந்துதுன்னாலும்,
அந்த
நெலைமையில
யாருக்கானாலும்
ஒரு
ஞாயமான
பயம்
இருக்கத்தானே
இருக்கும்?
ஆனா,
நடுநடுங்கிண்டு
இருந்த
திகில்
போயிடுத்து!
என்னிக்குமே
ஒரு மடாதிபதிக்கு
ஒரு
"healthy fear " இருக்கத்தான் வேணும். இன்னி
வரைக்கும் அந்த
பயம்
என்னை
விடாம
"காப்பாத்திண்டு"
இருக்குன்னு
நெனைச்சுக்கறேன்"
"மேலிடத்தேர்வு"
பெற்ற
அந்த
பதிமூன்று
வயது
பாலகன்
ஆச்சார்யாள்
என்ற
அந்த
சர்வ
சக்தியிடம்
சரண்
புகுந்ததும்,
ஆச்சார்யாளின்
கருணை
அவரை
ஆட்கொண்டது!
ரஹஸ்யத்தை
அடைத்து
வைத்துக்கொண்டிருந்த
பெரியவாளிடம்
விஷயத்தை
அவ்வளவு
லேசில்
கறந்துவிடமுடியுமா?
பலமுறை,
பல
வழிகளில்
போராடி
போராடி
கறந்தார்
ரா.கணபதி.
ஆச்சார்யாள்
தன்னை
ஆட்கொண்டதை
ரொம்ப
dilute பண்ணியே சொன்னார்.
அடுத்து
காமாக்ஷி
விஷயமாக
பேசியபோது,
"ஆச்சார்யாள்தான்
சகலமும்ன்னு
போன
பெரியவா,
"காமாக்ஷியே
காமாக்ஷி"ன்னு
ஆனாது
எப்டி?
பெரியவா......"
"அப்டீல்லாம் ஆயிட்டேனா
என்ன?
ஒனக்கு
என்னமோ
அப்டி
ப்ரமையாட்டமா
இருக்கு"
என்று
ஒரே
போடாக
போட்டார்.
"எனக்கு மட்டுந்தானா
என்ன?
எத்தனையோ
பெரியவாள்ளாமும்
அப்டித்தானே
அனுபவிச்சதா
சொல்றா"
"பெரியவாளுக்கெல்லாங்கூட
ப்ரமை
வரும்!
"ஸப்தசதீ"ல
சொல்லியிக்கு தெரியுமோன்னோ?
ஆச்சார்யாளும்
"விஸ்வம்
ப்ரமயஸி"ந்கறாரா
இல்லியா?
சரி...இன்று
இவருடன்
முட்டி
பிரயோஜனமில்லை
என்று
ரா.கணபதி
அன்று
வாபஸ்
வாங்கினார்.
அப்புறம்
பல
நச்சரிப்புகளுக்குப்
பின்,
"நான்
போனது
ஆச்சார்யாள்னு
தான். அப்றம் அதுவே அம்பாள், அது,
இதுன்னு கொஞ்சம்
கொண்டு
விட்டுது"...."அப்டித்தான்
போல
இருக்கு"
"கருணைக்கு காமாக்ஷி;
ஞானத்துக்கு
ஆச்சார்யாள்...ன்னு
சொல்லலாமா
பெரியவா?"
"போனது ஆச்சார்யாள்கிட்டதான்!
அது,
கருணை
காட்டணும்னுதான்;
ஞானத்தைப்
பத்தி
அப்போ
நான்
நெனச்சதே
இல்லே.
ஆத்மான்னு
ஒண்ணு,
அதை
ரக்ஷிச்சுக்கணும்
-ன்னுல்லாம்
அப்போ
தோணினதே
இல்லே.
கார்யார்த்தமாத்தான்,
ஒரு
பெரிய
கஷ்டத்ல
சஹாயம்
வேணும்னுதான்
ஆச்சார்யாள்ட்ட
போனேன்.
அப்டி
போறச்சே,
காரியார்த்தமா
இல்லாம,
அவர்ட்ட
ஒரு பிடிப்பு உண்டாச்சு.
பக்தின்னு
வேணா
சொல்லலாம்.
மடத்து
நிர்வாஹம்
ஒரு
பெரிய்ய
பொறுப்பு.
பண்டித
லோகத்ல
ஸோபிக்கணுமேங்கற
பொறுப்பு வேற.
பரமகுரு ஸ்வாமிகள்
எப்பப்
பாத்தாலும் வித்வத் சிம்மங்களோட
சாஸ்திர
விசாரம்
பண்ணிண்டே
இருப்பாரா.....நான்
போறச்சே
எல்லாம்
பாத்திருக்கேன்.
நானா....அப்ப
அந்த
அம்சத்ல
நிரக்ஷரகுக்ஷி
! எதுக்கு
சொல்றேன்னா...
ஆச்சார்யாள்ட்ட
ஞானத்துக்கான சாஸ்த்ரங்கள்ள
நல்ல
புத்தி
ப்ரகாசம்
உண்டாகணும்னு
வேண்டிண்டேன்.
காமாக்ஷிட்ட
போறச்சே
காரியார்த்தமா
இல்லே....கருணைக்காகத்தான்.
ஒண்ணு
வேணா
சொல்லலாம்....அம்பாள்ட்ட
போறச்சே
ஒரு
தாய்ப்பாசம்
கூடினதாவும்,
ஆச்சார்யாள்ட்ட
போறச்சே
தீனன்..ங்கற
பாவம்
ஜாஸ்தி
இருந்துது.
மரியாதையும்
ஜாஸ்தி.
அம்பாள்ட்ட கொஞ்சம்
ஸ்வாதீனம்!"...
இதற்கு மேல்
அவிழ்த்துவிடக்
கூடாதென
ஜாக்ரதையாகி
விட்டார்.... "சரி,
சரி, நீ
என்னமோ
பிரிச்சு
பிரிச்சு
ஆச்சார்யாள்-அம்பாள்,
ஞானம் - கருணை
ன்னு கேக்கறியே,
பன்னி
பன்னிக்
கேக்கறயேன்னு
ஏதோ
சொல்லிண்டு
போறேன்.
வாஸ்தவத்ல
எது,என்னன்னெல்லாம்
எனக்கு
தெரியாது!
அவ்ளவ்
சாமர்த்தியமெல்லாம்
எனக்கு
இல்லேப்பா!
ஏதோ
வேண்டிண்டேன்...
வேண்டிண்டதைக்
குடுத்தார்!
இன்னிவரைக்கும்
ரொம்பக்
குத்தம்
சொல்றதுக்கில்லாம
வண்டி
ஓடிண்டிருக்கு.."
அடக்கப்பெட்டகம்
கூட
அவதாரம்
எடுக்குமோ?
No comments:
Post a Comment