காஞ்சி மஹாபெரியவா நமக்கு எத்தனையோ தர்மங்களை செய்ய சொல்லியிருக்கிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான தர்மங்களையும், சேவைகளையும் எந்த ஒரு பிரதிபலனும் பார்க்காமல் செய்து வருகிறார்கள். அவர் சொன்ன ஒரே ஒரு வார்த்தை எத்தனையோ பேர்களின் வாழ்க்கை முறைகளை மாற்றியிருக்கிறது. வேதபாடசாலை கைங்கர்யமாகட்டும், கோ சம்ரட்சணமாகட்டும், புராதன ஆலயங்கள் பராமரிப்பாகட்டும் இப்படி எத்தனை எத்தனையோ கைங்கர்யங்கள் பெரியவாளின் வாக்கின் படி இன்றளவும் நடந்து வருகிறது. அதில் ஒரு கைங்கர்யமான கோ சம்ரட்சணத்தை அதிலும் மிகவும் வித்தியாசமாகவும் இப்படிக்கூட பண்ணலாம் என்று தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டு இன்றளவும் பண்ணிக் கொண்டு வருகிறார் முசிறியை சேர்ந்த தீனதயாளன் என்பவர்.
இவருடைய சேவையின் சிறப்பம்சம் என்னவெனில் அடிமாட்டிற்காக
விலைக்கு விற்க இருக்கும் பசுக்களை தேடிக் கண்டுபிடித்து விலை கொடுத்து வாங்கி காபந்து
பண்ணுவது. அது போக எதற்கும் பிரயோஜனமில்லை என்று ஒதுக்கித்தள்ளும் ஊனமுற்ற மாடுகளை
வாங்கி வந்து பராமரிப்பது போன்ற சேவைகள் தான்.
இன்று வரை இவர் பெரியவாளை தரிசித்தது கிடையாது.
ஆனால் அவர் சொன்ன கோ சம்ரட்சணம் என்ற வார்த்தையை விடாது பிடித்துக் கொண்டார். ஒவ்வொரு
அனுஷம் அன்றும் முசிறியில் இருந்து காஞ்சிபுரம் சென்று மஹாபெரியவாளுடைய அதிஷ்டானத்திற்கு
சென்று நமஸ்கரித்து அனுஷ பூஜையிலும் கலந்து கொண்டுவருகிறார்.
இவருடைய கோசாலையில் இன்றைய தினம் 40 பசுக்கள்
வரை இருக்கிறது. இதற்கு ஒவ்வொருவருடைய உதவியும் தேவைப்படுகிறது. ஒரு பசுவை வைத்து பராமரிப்பதற்கே
கஷ்டப்படும் இன்றைய காலகட்டத்தில் 40 பசுக்களை வைத்து பராமரிப்பது என்பது மிகவும் எளிதான
காரியம் இல்லை. இன்றுவரையிலும் மஹாபெரியவா
கூறிய வார்த்தைகளை தட்டாமல் அதற்கு ஏற்ப செயல்பட்டு வரும் இவருக்கு உதவ வேண்டியது நம்முடைய
கடமையும் கூட.
இவருடைய கோசாலையின் பெயர் சங்கரா கோசாலை. இவருடைய
அலைபேசி எண்ணும் வங்கி கணக்கு எண்ணும், கொடுத்துள்ளேன். பெரியவா பக்தர்கள் தங்களால்
முடிந்த அளவு இவருக்கு உதவி கோ சம்ரட்சணம் என்ற புண்ணிய காரியத்தில் பங்கு பெறலாம்.
G. Deenathayalan,
City Union Bank
A/C N.O: 500101011361944
IFSC Code: ciub0000331
MUSIRI Branch.
அலைபேசி எண்: 78454 59147
No comments:
Post a Comment