Tuesday, May 4, 2021

சொல்லணும்னு தோணிற்று.

 மஹாபெரியவாளுக்கு அப்புறம் அவரை மாதிரி இன்னொருத்தரை தேடறேன். கிடைக்கலை.


ஆனா இங்க இருக்கிற ஒவ்வொருத்தரும் தங்களுக்கு பிடிச்சவங்களை வாழும் குரு, வாழும் மகான், வாழும் தெய்வம் இப்படியெல்லம் அடைமொழி வைச்சு கூப்பிடறாங்க. இவங்க யாருக்காவது அந்த தகுதி இருக்கான்னு தெரியலை. ஒவ்வொருத்தரும் அடைமொழி வைச்சு கூப்பிடறது அவங்க அவங்க இஷ்டம்.


பெரியவா இதை செய் அதை செய் அப்படின்னு யாருக்கும் உத்தரவு போட்டது கிடையாது. இதை பண்ணினா நன்னா இருக்கும் அப்படிங்கறது என்னோட அபிப்ராயம் என்று தான் சொல்வாராம். அதே மாதிரி ஒரு செயல் வெற்றிகரமாக முடிந்தால் தனக்கு தானே பாராட்டு விழா, வாழ்த்துரை இப்படி எதுவுமே பண்ணிக்க மாட்டார். ஈஸ்வரன் க்ருபை, பகவத் ஸங்கல்பம் என்று தான் சொல்வாராம்.


தனக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வந்த வாரியார் சுவாமிகளை கூட பெரியவா தடுத்திருக்கிறார். வாரியார் அணிந்திருக்கும் ருத்ராட்சமாலை சிவனின் அம்சம் ஆதலால் தன்னை வணங்க அனுமதிக்கவில்லை.


தன் வாழ்நாளில் பெரும்பாலும் அவர் கவலைப்பட்டது வேதபாடசாலை குறித்தும், அர்ச்சகர்கள் குறித்தும் தான். அனைத்து ஆலயங்களிலும் விளக்கெரிய வேண்டும் என்று ஆசைப்பட்டதும் அவர் தான்.


எத்தனையோ பேர் தங்கள் கவலைகள், மனவருத்தங்களை கூறும் போது அம்பாள் பார்த்துப்பா, காமாக்ஷி பார்த்துப்பா என்று தான் கூறுவாரே தவிர வயிற்றுவலியை குணமாக்குகிறேன், கண்பார்வை கிடைக்கச் செய்கிறேன்னு சித்து விளையாட்டு பண்ணியது கிடையாது.


அவரை பார்க்காத என் போன்ற எத்தனையோ பேர் இன்று அவரைப் பற்றியே பேசுகிறோம் என்றால் அவர் ஒரு அவதார புருஷர். நடமாடும் தெய்வம். அந்த தெய்வம் மீண்டும் ஒரு அவதாரம் எடுத்து வரவேண்டும் என்பதே என்னைப் போன்றவர்களின் வேண்டுதல்.


இந்தப் பதிவு யாரையும் புண்படுத்தும் நோக்கில் பதிவு செய்யவில்லை. எனக்கு என் குரு ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தான் உயர்ந்தவர். அதற்காக மற்ற குருக்களை நான் இகழவில்லை. அது என் வேலையும் அல்ல.


குருவின் பெயரைச் சொல்லும் தகுதி கூட எனக்கு இருக்கான்னு தெரியலை. (உடனே இது தன்னடக்கம்னு சொல்லாதீங்க. ஏன்னா அவர் சொன்னது எதையும் நான் இன்னிக்கு வரைக்கும் உருப்படியா செய்தது கிடையாது.)




No comments:

Post a Comment