வனவாசம் கடினம்
என்று தெரிந்தும் ராமருக்கு சேவை செய்த லக்ஷ்மணன், ராமர் இல்லாத நாட்டை நான் ஆளமாட்டேன்
என்று பாதுகையை வாங்கி ஆட்சி செய்த பரதன், மாற்றன் மனைவியை அபகரித்த அண்ணன் இராவணன் செய்தது தவறு தான் என்று தெரிந்தும் அண்ணனுக்கு
துணை நின்ற கும்பகர்ணன், தம்பியின் (முருகனின்) காதலுக்காக உபகாரம் செய்த (அண்ணன்)
விநாயகர் இவர்களின் பாசத்தில் ஒரு சதவீதமாவது இப்போதைய அண்ணன் தம்பிகளிடத்தில் இருக்குமா
என்று கேட்டால் இல்லை என்பது தான் பலரின் பதிலாக இருக்கும்.
சும்மா வெளியில்
வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாமே தவிர என் தம்பி / அண்ணன் எப்படிப்பட்டவன் தெரியுமா
என்று புகார் கடிதம் வாசிப்பவர்கள் தான் அதிகம் இருப்பார்கள். ஐயா சாமிகளே புதுசு புதுசா
ஒரு தினத்தை உருவாக்கி இருக்கிறவர்களின் பிராணனை வாங்காதீங்க தயவு பண்ணி.
உங்களுக்கு உண்மையிலேயே
அண்ணன் மேலேயோ தம்பியின் மேலேயோ பாசம் இருந்தால் உங்கள் அண்ணன்/ தம்பி கலங்கி நிற்கும்
போது உனக்கு துணையா நான் இருக்கேன். ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்து உன்னை நான் பார்த்துக்கிறேன்
அப்படின்னு மனசார ஒரு வார்த்தை சொல்லுங்க. அது போதும். அதை விட்டுட்டு இன்னிக்கு ஒரு
நாள் மட்டும் அண்ணன் தினம், தம்பி தினம்னு சொல்லிட்டு நாளைக்கு அந்த அண்ணனையோ தம்பியையோ
அடிக்கறதுக்கு கூலிப்படையை ஏவும் வேலையை பார்க்காதீங்க.
சொல்லணும்னு தோணிற்று

No comments:
Post a Comment