ஒரு பாம்பு விஸ்வகர்மா ஒருவரின் அறைக்குள் தெரியாம வந்திடுச்சு. உள்ளே இருந்த கருவிகள் மேல ஊர்ந்து போகும்போது எதோ ஒரு கூர்மையான பொருளால் அதோட உடலில் சிறு காயம் ஏற்பட்டது ... ... ...
உடனே சட்டுன்னு கோபத்தோட அங்க இருந்த ஒரு கூரான ரம்பத்தை போய் கடிக்க முயற்சி செய்தது ... ... ...
இப்போ ரம்பத்தின் பற்கள் அறுத்தால் அதன் வாய் பகுதியில் கிழிச்சு ரத்தம் வர ஆரம்பித்தது ... ... ...
பாம்புக்கு கோபம் தலைக்கேறியது. அந்த ரம்பத்தை சுற்றி வளைத்து கொல்லும் நோக்கத்தோட தன் பலம் முழுவதையும் சேர்த்து சுத்தி இறுக்க ஆரம்பிச்சது ... ... ...
பாம்பின் முழு உடலும் ரம்பத்தின் பற்களால் வெட்டப்பட்டு, காயம் ஆகி ரத்தம் கொட்ட ஆரம்பிச்சது என்ன நடக்குதுன்னு புரிஞ்சுக்கிறதுக்கு முன்னால அந்த பாம்பு தனது செயலாலேயே உடல் துண்டாக்கப்பட்டு இறந்து போச்சு ... ... ...
இதே போல தான் நாம் நமது வாழ்க்கையிலும் மத்தவங்க கிட்ட தேவையில்லாத வார்த்தைகளை நான் என்ற அகங்காரத்தில் நாம்தான் புத்திசாலி தான் பலமானவன் என உபயோகப்படுத்திட்டு அதன் வீரியம் நம்மையே தாக்கும் போது ... ... ...
நாம செய்த தவறு என்னங்கிறதை உணர்ந்து அதிலிருந்து விலகி போகாமல் மேலும் மேலும் கடினமான வார்த்தைகளை பிரயோகிக்க ஆரம்பித்து அதன் எதிர்விளைவால் நமது மன நிம்மதியை இழந்து ... ... ...
தேவையற்ற கோபம், பதட்டம், மனஅழுத்தம் இவற்றால் நமது உள்ளம் மற்றும் உடல் நலத்தையும் கெடுத்துக் கொண்டு நம்மையே இழந்து விடுகிறோம் ... ... ...
இந்த உலகத்தில் ஒன்றை விட ஒன்று பலம் பொருந்தியதாகவே உள்ளது அதுதான் இயற்கையின் நியதி ... ... ...

No comments:
Post a Comment