ஒரு பழமொழி சொல்வாங்க.
அது சொன்னால் அசிங்கமாத்தான் இருக்கும். ஆத்தா மானம் காற்றில் பறக்க மகன் கும்பகோணத்தில்
வஸ்திரதானம் செய்தானாம். இது மாதிரி தான் இருக்கிறது இப்போதைய மடாதிபதிகளின் நிலைமையும்.
எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தை நம்பி இருக்காமல் நம் கோவிலை நாம் தான் பாதுகாக்கணும்னு
முடிவு பண்ணி ஊருக்கு ஒரு பத்து பேரை தேர்ந்தெடுத்து அவர்கள் வசதியானவர்களாகத்தான்
இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. Physical work பண்ணக்கூடியவர்களை அதிகம் அந்தக்
குழுவில் சேர்த்து முதலில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள புராதன ஆலயங்களை கணக்கெடுத்து அந்த ஆலயங்களில் முதலில் ஒருவேளை விளக்கேற்ற எண்ணெய்க்கு
ஏற்பாடு செய்தாலே போதுமே. எதற்குமே ஆரம்பம் என்று ஒன்று இருக்கத்தான் வேண்டும். முதலில்
ஒரு படி எடுக்க முயற்சிக்கவும். இதில் நீ பெரியவனா நான் பெரியவனா என்ற ஈகோ பார்க்க
தேவையில்லை. நம் ஊர் நம் ஸ்வாமி என்ற நினைப்பு மட்டும் இருந்தாலே போதும். சாய்பாபாவுக்கு
மேக்அப் போட்டுட்டு வாட்ஸ் அப்பில் ஷேர் செய்வதாலோ, அனுமாரின் படத்தை ஷேர் பண்ணுவதாலோ
மட்டும் உங்களோட பிரச்சினைக்கு முடிவு வந்து விடப் போவதில்லை. உங்கள் ஊர் ஸ்வாமியின்
பசியை போக்க ஒரு பிடி அரிசியாவது கொடுங்கள். அது போதும்.
மாதம் ஒரு நாள்
அந்த கோவிலில் போய் சுற்றியிருக்கும் குப்பைகளை சுத்தம் செய்யுங்கள். படிக்கட்டுகளை
அலம்பி விடலாம். விளக்குகளை நன்றாக தேய்த்து கொடுக்கலாம். உழவாரப் பணிக்குழுக்கள் எத்தனையோ
இருக்கின்றன. அவர்களுடன் இணைந்து கைங்கர்யங்கள் செய்யலாம். முகனூலில் போட்டோ எடுத்து
போட்டு அதில் கிடைக்கும் அற்பத்தனமாக லைக், கமெண்ட், ஷேர் இவற்றில் இருந்து வெளியே
வாருங்கள்.
கோவில் வெளிச்சமாக
இருந்தால் உங்கள் வாழ்வு வெளிச்சமாக இருக்கும்.

No comments:
Post a Comment