சிவராத்திரி அன்று
11.03.2021 காலை நானும், என் மனைவியும் பாபநாசம் சென்று கொண்டிருந்தோம். எங்களை திருநெல்வேலியை
சேர்ந்த பாஸ்கர் என்ற சிவனடியார் அழைத்து சென்றார். அந்த சமயத்தில் அவருக்கு ஒரு அவசர
அழைப்பு அலைபேசியில் வந்தது. அந்த செய்தியின் சாராம்சம் கீழே.
//திருநெல்வேலியை அடுத்துள்ள வல்லநாடு என்ற
ஊரில் இருந்து சுமார் இரண்டு அல்லது மூன்று கிமீ தொலைவில் உள்ள அகரம் என்ற கிராமத்தில்
இருக்கும் சுமார் 600 வருடங்களை கடந்த காசி விஸ்வநாதர் ஆலய சிவராத்திரி பூஜைக்கு நான்காம்
கால பூஜை உபயதாரர் இல்லாத காரணத்தால் நின்று போகும் சூழ்நிலை..//
நாங்கள் அன்று
இரவு நாணல்காடு கிராமத்தில் இருக்கும் திருக்கண்டீஸ்வரர் ஆலய சிவராத்திரி பூஜை ஏற்பாடுகளை
செய்து கொண்டிருந்த காரணத்தால் முதல் மூன்று கால பூஜையை அங்கு பூர்த்தி செய்து விட்டு
நான்காம் கால பூஜைக்கு அகரம் கோவிலுக்கு வருவதாக தெரிவித்து நான்காம் கால பூஜைக்கு
உண்டான ஏற்பாடுகளை பண்ண சொல்லிவிட்டோம்.
உடன் நண்பர்கள்
சிலரை தொடர்பு கொண்டு குறைந்த பட்சம் 500 அல்லது 1000 அனுப்ப சொன்னோம். சில நிமிடங்களில்
தேவையான பணம் கிடைத்து விட்டது. எல்லாம் ஈஸ்வரன் செயல் மட்டுமே. மகிழ்ச்சியுடன் அகரம்
கோவில் அர்ச்சகரை மீண்டும் தொடர்பு கொண்டு பூஜைக்கு தேவையான பொருட்கள், அபிஷேகத்திற்கு
தேவையான பொருட்கள் அனைத்தையும் எந்தவித குறைவும் இல்லாமல் வாங்க சொல்லிவிட்டோம்.
12.3.2021 அதிகாலை
3.30 மணிக்கு அகரம் கிராமத்தை நோக்கி விரைந்தோம். கோவிலின் உள்ளே சென்று காசி விஸ்வநாதரை
தரிசித்தவுடன் நாங்கள் இருப்பது காசியா அல்லது திருநெல்வேலியா என்று எங்களால் உணரமுடியவில்லை.
அருகில் தனி சன்னதியில் விசாலாட்சி. அவளை உன்னிப்பாக கவனித்தால் வாய் அசைத்து நம்முடன்
பேசுவது போலவே இருக்கிறது. பிரகாரங்களை சுற்றி இதர பரிவார தேவதைகள் இருக்கிறார்கள்.
கோவிலில் ஸ்தல வரலாற்றை பற்றி கேட்டு அறிந்தோம்.
இந்த கோவிலுக்கு
வருமானம் என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒன்றும் இல்லை. இந்து அறநிலையத்துறையின்
அவலங்கள் உலகறிந்த விஷயம் தான். இங்கு வேலை செய்யும் அர்ச்சகருக்கு அரசாங்கம் மிகப்பெரிய
மனதுடன் மாதம் 310 ரூபாய் சம்பளம் கொடுக்கிறது. இந்த ஊரில் இருந்த ஒருவர் இப்போது அமெரிக்காவில்
டாக்டராக வசித்து வருகிறார். அவர் தினமும்
சிவன் கோவிலுக்கு 25 ரூபாயும், பெருமாள் கோவிலுக்கு 25 ரூபாயும் என்று நிர்ணயம் செய்து
கொண்டு மாதம் 1500 ரூபாய் வீதம் அர்ச்சகருக்கு அனுப்புகிறார். திரைப்படத்தில் காண்பிப்பது
போல அருமையான கிராமம். போக்குவரத்து வசதி என்பது அறவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
புதிது புதிதாய்
கோவில் கட்டுவதற்கு பதிலாக க்ஷீணமடைந்து விளக்கேற்ற எண்ணெய் கூட இல்லாமல் இருக்கும்
ஆலயங்களை நாம் பராமரிக்க வேண்டும் என்ற மஹாபெரியவாளின் வார்த்தைக்கு இணங்க இந்த கோவிலுக்கு
நம்மால் ஆனதை பண்ண வேண்டும் என்று அங்கேயே முடிவு செய்தோம். முடிவு செய்தோம் என்று
சொல்வதை விட இறைவனின் சங்கல்பம் என்று தான் சொல்ல வேண்டும்.
தொடர்ந்து அர்ச்சகரிடம்
பேசினோம். பிரதோஷ பூஜைகள் சில சமயம் நடத்துவதற்கு
பொருளாதார சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்தார். இதர விஷயங்களையும் கேட்டு தெரிந்து கொண்டோம்.
நிறைவாக அவரிடம் 3 உறுதி மொழி வாங்கினோம்.
1.
எந்தக்
காரணம் கொண்டும் ஆலயத்தில் நடந்து கொண்டிருக்கும் பூஜையை நிறுத்தக் கூடாது.
2.
இன்னும்
ஒரு வருட காலத்திற்கு நண்பர்கள் மூலம் பிரதோஷத்திற்கு உண்டான செலவை ஏற்றுக் கொள்வதாக
தெரிவித்தோம்.
3.
தினமும்
விளக்கேற்ற வேண்டும். (அதற்கு உண்டான எண்ணெய்க்கும் ஏற்பாடு செய்து கொடுக்கிறோம் என்றும்
தெரிவித்தோம்.)
கவனிப்பாரற்று
கிடக்கும் சிவாலயங்களை பற்றி கேள்விப்பட்டும் நம்மால் எந்த ஒரு உபகாரமும் செய்யவில்லையென்றால்
அது சிவநிந்தனைக்கு சமம் என்ற மஹாபெரியவாளின் வார்த்தைக்கு (கட்டளைக்கு) இணங்க இந்த
ஆலயத்திற்கும் நம்மால் ஆனதை செய்வோம். ட்ரஸ்ட் ஆரம்பிப்பதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கும்
காரணத்தினால் இப்போதைக்கு என்னுடைய தனிப்பட்ட வங்கி எண்ணை அளித்திருக்கிறேன். நம்மால்
பிரதிமாதம் 250 ரூபாய் அந்த ஆலயத்திற்காக கொடுத்தால் பிரதோஷ பூஜை சுமுகமாக நடக்க ஏதுவாக
இருக்கும். இது நமக்கே தெரியாமல் நாம் செய்யும்
நல்ல காரியம்.
கரம்
கூப்பி கேட்கிறோம். கை கொடுத்து உதவுங்கள்.
பணம்
அனுப்ப வேண்டிய வங்கி விவரங்கள்
Account holder name
: G.Sujatha
Acc.No. : 1249177000000849
Karur Vysya Bank
Tirunelveli Town branch
IFSC CODE -
KVBL0001249
No comments:
Post a Comment