நாம ஒவ்வொருவரும் பிழைப்புக்காக எதோ ஒரு ஊரில் இருப்போம். சொந்த ஊரை விட்டுட்டு வெளியே வேலைக்கு வந்த நாம எல்லோரும் ஊர்ல இருக்கிற சொந்த பந்தங்களை நினைச்சு விசாரிச்சுட்டு இருப்போம். ஆனா நம்ம சொந்த ஊர்ல இருக்கிற சிவன் கோவில், பெருமாள் கோவில், கிராம தேவதை கோவில் இப்படி எந்த கோவிலை பற்றியும் நம்ம சொந்த பந்தங்க கிட்டே விசாரிக்கிறது இல்லை. ஏன்னா நமக்கு அது தோணமாட்டேங்கிறது. நான் யாரையும் குறிப்பிட்டு சொல்ல விரும்பலை. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கோவிலையும் பாழடைந்த நிலையில் விட்டுட்டு தான் பரிகாரம் பரிகாரம்ன்னு ஊர் ஊரா சுத்திட்டு இருக்கோம். அதாவது எதைத் தின்றால் பித்தம் தெளியும் அப்படிங்கற மாதிரி.
உங்க எல்லோர் கிட்டேயும் திரும்ப திரும்ப சொல்றது ஒன்னே ஒன்னு தான். மஹாபெரியவா சொன்ன மாதிரி ஒரு நாளைக்கு ஒரு பிடி அரிசி ஒரு சல்லி காசு ன்னு சொன்னார். அதே மாதிரி ஒரு நாளைக்கு ஒரு பிடி அரிசியும் ஒரு ஐந்து ரூபாயும் (ஐந்து ரூபாய் முடியலையா குறைஞ்சது ஒரு ரூபாயாவது) எடுத்து வச்சாலே போறும். . இதை உங்க சொந்தக்காரங்க கிட்டேயும் சொல்லி ஒரு பத்து பேர் சேர்ந்தால் கூட போதும். ஒரு கோவிலுக்கு ஒருகால பூஜை அழகா நடத்தலாம். இதுக்குன்னு யாரையும் யாரும் கேட்க வேண்டியதே இல்ல. எந்த அறநிலையத்துறையும் வேண்டாம். எந்த அமைச்சரும் வேண்டாம்.இது ஒன்றும் அவ்வளவு பெரிய சிரமமான காரியமும் இல்ல. மனசு தான் வேணும்...
தயவுசெய்து உங்க கிட்ட நான்
வைக்கும் கோரிக்கை ஒன்னு தான். அந்த பாழடைந்த கோவில்ல
இருப்பது வெறும் சிலை இல்லை. உயிரோட்டம்
உள்ள ஒரு ஸ்வாமி. அவர பட்டினியா போட்டுட்டு
நாம்
சாப்புடுறது சரியா ன்னு நீங்களே
யோசிச்சுக்கோங்க
காமாக்ஷி தான் நல்ல வழி காண்பிக்கணும்.

No comments:
Post a Comment